By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: “பணம் வரவில்லை என்றார்கள்… கணக்கில் ரூ.11,200 காலி!”
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > “பணம் வரவில்லை என்றார்கள்… கணக்கில் ரூ.11,200 காலி!”
தமிழ்நாடுதிருப்பத்தூர்

“பணம் வரவில்லை என்றார்கள்… கணக்கில் ரூ.11,200 காலி!”

Last updated: October 6, 2026 3:23 pm
October 6, 2026
19 Views
Share
SHARE

வாணியம்பாடி, அக். 6:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, ஆதார் கைரேகையை பயன்படுத்தி தனது வங்கி கணக்கில் இருந்து இரண்டு தவணைகளில் மொத்தம் ரூ.11,200 எடுக்கப்பட்டதாகவும், அந்தப் பணம் தனக்கு வழங்கப்படவில்லை என்றும் 100 நாள் வேலைத்திட்ட பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

வாணியம்பாடி தாலுகா வள்ளிப்பட்டு கிராமம் குட்டக்கொல்லி பகுதியைச் சேர்ந்த செல்வி பொன்னுரங்கம் என்பவர் அளித்துள்ள மனுவில், கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி 100 நாள் வேலை செய்ததற்கான ஊதியத்தை எடுப்பதற்காக வள்ளிப்பட்டு செந்தமிழ் இ-சேவை மையத்திற்கு சென்றதாக தெரிவித்துள்ளார். அங்கு இ-சேவை மையத்தை நடத்தி வரும் தமிழரசனிடம் ஆதார் கைரேகை மூலம் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்துத் தருமாறு கேட்டதாகவும், கைரேகை வைத்த பின்னர் “பணம் வரவில்லை” என அவர் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால், பின்னர் வங்கி கணக்கை சரிபார்த்தபோது, அன்றைய தினமே தனது கணக்கில் இருந்து ரூ.9,100 எடுக்கப்பட்டிருந்தது தெரியவந்ததாக புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், பிப்ரவரி 16-ஆம் தேதி மீண்டும் அதே இ-சேவை மையத்திற்கு சென்று கைரேகை வைத்து பணம் எடுக்க முயன்றபோதும், பணம் வரவில்லை என தெரிவித்து அனுப்பியதாக கூறியுள்ளார்.

இதையடுத்து வங்கிக்கு சென்று கணக்கு விவரங்களை சரிபார்த்தபோது, பிப்ரவரி 16-ஆம் தேதி மேலும் ரூ.2,100 எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் இரண்டு தவணைகளில் தனது வங்கி கணக்கில் இருந்து ஆதார் கைரேகை வாயிலாக மொத்தம் ரூ.11,200 எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து இ-சேவை மையத்தை நடத்தி வரும் தமிழரசனிடம் கேட்டபோது, தான் பணம் எடுக்கவில்லை என்றும், இந்த விவகாரத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்ததாக செல்வி பொன்னுரங்கம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதேபோன்று அந்த இ-சேவை மையத்தில் மேலும் சிலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனது புகாரில் தெரிவித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்ட இ-சேவை மையம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி, தனது வங்கி கணக்கில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.11,200-ஐ மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் செல்வி பொன்னுரங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு வ.உ.சி பூங்கா நுழைவாயில் தூண் சேதம்: உடனடி நடவடிக்கை கோரி பொதுமக்கள் கோரிக்கை
சிறுசேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல் முகவர்களுக்கான சிறப்பு போட்டி: 15ம் தேதி வரை நடக்கிறது
கன்னியாகுமரி களைகட்டியது: குவிந்த சுற்றுலா பயணிகள்
கோவையில் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் பிரம்மாண்ட மறுதிறப்பு விழா
தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

February 3, 2025
170 Views
மழைக்காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பாக
களியக்காவிளை காதலன் கொலை ; காதலி குற்றவாளி – கோர்ட் தீர்ப்பு
கோதையாற்றில் முதலை நடமாட்டம்: ட்ரோன் மூலம் வனத்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டை
காவலராக உயிரிழந்த விக்னேஷ்குமார் குடும்பத்திற்கு 21,69,900 ரூபாய்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account