தஞ்சாவூர், மே 12 –
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வேலூரில் பயிற்சி பெற்ற யுவஆப்தமித்ரா முதன்மை பயிற்றுநர்களை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பாராட்டினார்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நாடு முழுவதும் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடிய மற்றும் பேரிடர் அபாயம் நிறைந்த மாவட்டங்களில் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்டம், மை பாரத், சாரண சாரணியர்கள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தன்னார்வலர்களுக்கு யுவ ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தஞ்சாாவூர் மாவட்டத்தில் இருந்து ஆப்தமித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற நான்கு முதன்மை பயிற்றுநர்கள் மற்றும் மை பாரத் அமைப்புகளில் சார்ந்த முதன்மை பயிற்றுநர்கள் திட்டத்தின் கீழ் வேலூர் தொழில்நுட்ப நிறுவனத்தில் மே 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சியை பெற்றனர். இப்பயிற்சி பெற்ற தஞ்சாவூர் மாவட்ட முதன்மை பயிற்றுநர்கள் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜி திட்டம் சான்றுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.



