நாகர்கோவில், மார்ச் 12 –
நாகர்கோவில் மாநகராட்சியில் மாநகர நல அலுவலராக பணியாற்றி வந்த மருத்துவர் மனோஜ் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவர் திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் மாநகர நல அலுவலராக மருத்துவர் சரோஜா பொறுப்பேற்றார்.
இந்நிலையில் இன்று திடீரென வடசேரி கிறிஸ்டோபர் பேருந்து நிலையத்தில் உள்ள நவீன இலவச கழிப்பிடத்தை ஆய்வு மேற்கொண்டதோடு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் சுகாதார ஆய்வாளர் ஜாண் உள்பட பலர் உடன் இருந்தனர்.



