திருச்சி, மே 2 –
திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் நேற்று (மே 1) ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. கடந்த 10 நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று இரவு திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் தொட்டியம், அரங்கூர், ஏலூர்பட்டி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.


