கமுதி, ஜூன் 6 –
ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் அவர்களை தமிழக வெற்றி கழகத்தின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கமுதியில் உள்ள கோட்டைமேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மக்கள் நலப் பணிகள் சிறப்பாக அமையவும், அரசுத் திட்டங்கள் பொதுமக்களுக்கு முழுமையாக சென்றடையவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் அரசு அதிகாரிகள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.



