தேனி, ஜூன் 3 –
கோடை விடுமுறை முடிவடைந்து நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் பாதுகாப்பாகவும் சுகாதாரமான சூழலிலும் கல்வி கற்க தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்யும் வகையில், தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்குட்பட்ட முத்துத்தேவன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. வைத்திநாதன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பள்ளி வளாகத் தூய்மை, வகுப்பறைகளின் பராமரிப்பு, குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகள், மாணவர்களுக்கான அமர்வு ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பள்ளி திறப்பிற்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து, தேவையான பணிகளை முழுமையாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும், பள்ளி திறக்கும் முதல் நாளிலிருந்தே மாணவர்களுக்கு சிறந்த கல்விச் சூழலை ஏற்படுத்த அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.



