திருச்சி, ஜூன் 16 –
ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை ரோடு ஹெலிபேடு தளம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஸ்ரீரங்கம் போலீசார், சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் சென்ற கவுதம் (33) மற்றும் லோகநாதன் (25) ஆகிய இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா, செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



