திண்டுக்கல், ஆகஸ்ட் 1 –
திண்டுக்கல்லில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பாக பொதுக்குழு கூட்டம் மற்றும் கலந்தாய்வு கூட்ட நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தலைவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் செ. சரவணன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரும், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் மாவட்ட துணை தலைவருமான சுந்தர மகாலிங்கம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் அவைத்தலைவர் நாட்டாண்மை என்.எம்.பி. காஜா மைதீன், துணை அவைத்தலைவர் என். சேக்தாவுது, மாவட்ட செயலாளர் அ. ராஜகுரு, பொருளாளர் ஆ. சுசிலா மேரி, சையது அபுதாஹிர் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2024-25 க்குரிய செயல்பாடு அறிக்கையை மாவட்டச் செயலாளர் அ. ராஜகுரு சமர்ப்பித்தார். மாவட்ட பொருளாளர் ஆ. சுசிலாமேரி வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தார். இக்கூட்டத்தில் அவைத்தலைவர் என்.எம்.பி. காஜாமைதீன் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செ. சரவணன் பேசியதாவது: இந்தியா ரெட் கிராஸ் சொசைட்டி திண்டுக்கல் மாவட்டம் நடத்திய செயல்பாடு திட்டங்களான ரத்த தான முகாம் ஆக்ஸிஜன் செறிவூட்டி வழங்கி 106 உயிர்களை காப்பாற்றியமைக்கு அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் சேவையில் மென்மேலும் சிறந்து விளங்க பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் உறுப்பினர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.