தருமபுரி, ஜூலை 31 –
தருமபுரி குமாரசாமிபேட்டை அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், அரிச்சந்திரன் கோவில் தெரு அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், தீபாரதனைகள் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் தங்க கவசத்திலும், அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் குமாரசாமி பேட்டை பகுதியிலுள்ள பக்தர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர். திருக்கோவில் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



