தருமபுரி, ஆகஸ்ட் 30 –
தருமபுரி மாவட்டம் கோனநாயக்கனஅள்ளி ஊராட்சி மற்றும் வெள்ளாளப்பட்டி ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாரவாடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் அனைத்து துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். மகளிர் உரிமைத் தொகை, ஆதார் கார்டு, குடும்ப அட்டை, இலவச வீட்டு மனை பட்டா ஆகியவை வேண்டி பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த முகாமில் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்து தீர்வு காணப்பட்ட மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



