By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்

Last updated: April 30, 2026 6:48 pm
April 30, 2026
21 Views
Share
SHARE

தருமபுரி, ஏப். 30 –

தருமபுரி மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்க சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன என்று தேர்தல் பொது பார்வையாளர் ஹீரா லால் கூறினார். தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகின்ற மே மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.

மாவட்ட தேர்தல் பொது பார்வையாளர் ஹீராலால் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் பசுமை தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த வகையில் வாக்குப்பதிவின்போது பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதன்படி தொகுதி வாரியாக தருமபுரியில் 32, பாப்பிரெட்டிபட்டி 34, அரூரில் 6, பென்னாகரத்தில் 1, பாலக்கோட்டில் 3 என மொத்தம் 76 பசுமை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

மாவட்டத்தில் 960 வாக்குச் சாவடிகளில் 100 மீட்டர் சுற்றளவில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முழுமையாக தவிர்க்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் முதல் முறை வாக்களித்த இளம் தலைமுறை வாக்காளர்கள் மற்றும் பெண்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதே போல் 2,930 விதை பந்துகள், 5,375 விதை பென்சில்கள் மற்றும் விதை பேனாக்கள் வாக்குப்பதிவுகளின் போது வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டன.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பொருட்களை பயன்படுத்த அனைத்து பகுதிகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இதே போல் பசுமை வாக்குப்பதிவு தொடர்பாக பல்வேறு செயல்பாடுகள் மூலம் பொது மக்களுக்கு இடையே விழிப்பு ஏற்படுத்தப்பட்டது. தண்ணீர், தாவரங்கள், நிலம் ஆகிய அடிப்படை வாழ்வாதார காரணிகளுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனவே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்க்க பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்.

மாவட்டத்தில் பசுமை தேர்தலில் நடத்த எதிர்பார்ப்பதை விட நல்ல ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகள், விதை பந்துகள், விதை பேனாக்கள் மற்றும் விதை பென்சில்கள் நிலங்களில் செடிகளாக வளரும் போது மாவட்டத்தில் பசுமை பரப்பு அதிகரிக்கும் இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழகத்தில் முதல்முறையாக அரசு விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சி; மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் தொடங்கி வைத்தார்
தக்கலை அருகே மதுக்கடையில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
குவித்து வைக்கப்பட்ட பைபர் கழிவுகளில் திடீர் தீ விபத்து
குழித்துறை அருகே தவெக நிர்வாகி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
மார்த்தாண்டம் அருகே பைக் – கார் மோதல்: வாலிபர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகர்கோவில் மாநகர கிளை சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

July 7, 2025
44 Views
மீனவர் மக்கள் முன்னணி கட்சி கண்டனம்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 128 வது பிறந்தநாள் விழா
வாகனம் மோதி பெண் உடல் நசுங்கி உயிரிழப்பு
மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account