தஞ்சாவூர், ஆகஸ்ட் 5 –
தஞ்சாவூர் அருகே உள்ள கள்ளப் பெரம்பூர் பாசன ஏரியை 7 கிராம இளைஞர்கள் வாட்ஸ் ஆப் மூலம் குழுவை அமைத்து தூர்வாரும் பணியை தொடங்கி உள்ளனர்.
தஞ்சாவூர் அடுத்துள்ள கள்ளப் பெரம்பூர் பாசனை ஏரி மாமன்னர் ராஜ ராஜ சோழனால் 1000 ஆண்டு களுக்கு முன்பு வெட்டப்பட்ட பெரிய ஏரியாவும், சுமார் 10 கிலோமீட்டர் ஏரியை சுற்றியுள்ள 7 கிராமங்களில் உள்ள 2,662 ஏக்கர் பரப்புளவு விலை நிலங்களுக்கு பாசன நீரை சேமித்து வழங்க கூடிய ஏரியில் கருவேல மரங்களும், புதர்களும் மண்டி நீர் சேமிப்பை தடுத்தன. இதனால் கள்ளப் பெரம்பூர் கிராமத்தில் இளைஞர்கள் தூர்வார முடிவு செய்து வாட்ஸ் ஆப் குழு அமைத்து அதில் 7 கிராமம் மக்களின் பங்களிப்பாக ரூபாய் 20 லட்சம் வழங்கினர்.
இதில் தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் முரசொலி ரூபாய் 1 லட்சம் நிதியாக வழங்கிய நிதி திரட்டும் பணியை தொடங்கி வைத்தார். தற்போது வரை 400 பேர் இணைந்து பணமாகவும் சிலர் பொக்லைன் இயந்திரங்கள், அவற்றிற்கு எரிபொருள் வழங்குவதாக தெரிவித்தனர். இதனிலேயே மக்களவை உறுப்பினர் முரசொலி, மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் திருவையாறு சட்டப் பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகரன் ஆகியோர் கள்ளப்பெரம்பூர் பாசன ஏரி தூர்வாரும் பணியை பார்வையிட்டு இளைஞர் குழுவை பாராட்டினார்.
போதிய தண்ணீர் இல்லாமல் வறண்டு நிலவும் நிலையில் கள்ள பெரம்பூர் ஏரி முழுமையாக தூர்வார சுமார் 200 கோடிக்கு மேல் தேவைப்படும். இந்த நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு ஒதுக்கிட கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளோம் என்றார்.



