சேலம், ஜுலை 1 –
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பாக சேலம் மண்டலத்தில் 20 – வது தேசிய புள்ளியியல் தின விழா சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இந்தியாவின் நவீன புள்ளியியலின் தந்தை யும் தலைசிறந்த புள்ளியியல் நிபுணருமான பேராசிரியர் பி.சி. மஹாலனோபிஸ் அவர்கள் புள்ளியியல் மற்றும் பொருளாதாரத் திட்டமிடலில் அவர் ஆற்றிய அரும் பணிகளை கௌரவிக்கும் விதமாக கடந்த 2007 – ம் ஆண்டு முதல் அவரது பிறந்த நாளை இந்திய தேசிய புள்ளியியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் சேலம் மண்டல புள்ளியல் இணை இயக்குனர் குப்புசாமி முன்னிலையில் 20 – வது தேசிய புள்ளியியல் தின விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தார். சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் பணிபுரியும் புள்ளியியல் துறை துணை இயக்குனர்கள் மற்றும் சேலம் மாவட்ட புள்ளியியல் துணை இயக்குனர் வினோதா வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் புள்ளியியல் சார்ந்த ஆய்வறிக்கை, பேச்சுப்போட்டி, நாடகம் மற்றும் வினாடி, வினா ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் பணிபுரியும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழாவில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.



