By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாவட்ட வேளாண்மையில் எல்நினோவால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாவட்ட வேளாண்மையில் எல்நினோவால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்ட வேளாண்மையில் எல்நினோவால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் மற்றும் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Last updated: July 21, 2026 6:26 pm
July 21, 2026
2 Views
Share
SHARE

சேலம், ஜூலை 21 –

எல்நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பதால் உருவாகும் இயற்கையாக நிகழும் காலநிலை மாற்றம் ஆகும். இது உலகளாவிய காற்றின் தன்மை மற்றும் மழைப்பொழிவு அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும். பல நாடுகளின் வானிலை மாற்றம் காரணமாக வேளாண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.

இந்தியாவில் குறிப்பாக தென்மேற்கு பருவமழையின் தீவிரம் மற்றும் மழைப்பொழிவு பருவ நிலை மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் எல் – நினோ தாக்கத்தின் காரணமாக அதிக வெப்பநிலை மழைப்பொழிவில் காலதாமதம் அல்லது இடைவெளி, சில பகுதிகளில் மழை குறைவு மற்றும் நீர் வள அழுத்தம் போன்ற சூழ்நிலைகள் உருவாக கூடும். இருப்பினும் வடகிழக்கு பருவமழையின் செயல்பாடு உள்ளிட்ட பிற காலநிலை காரணிகளும் மழைப்பொழிவு பாதிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் தாக்கம் ஒரே மாதிரியாக இருக்காது.

சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான பயிர்கள் பருவ மழை மற்றும் நீர் பாசனத்தை சார்ந்துள்ளது. மழை குறைவு அல்லது நீண்ட வறண்ட இடைவெளி ஏற்படும். அதனால் நெல், மக்காச்சோளம், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், மஞ்சள், மரவள்ளி கிழங்கு மற்றும் தோட்டக்கலை பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூல் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதிக வெப்பநிலை காரணமாக மண்ணின் ஈரப்பதம் குறைதல் பாசன தேவைகள் அதிகரித்தல் மற்றும் பூச்சி நோய் தாக்கங்கள் அதிகரிக்கும் சாத்தியம் உண்டு.

எனவே சேலம் மாவட்ட விவசாயிகள் இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் வேளாண்மை துறையின் வானிலை முன்னறிவிப்புகளை கவனித்து அதற்கு ஏற்ப சாகுபடி செய்ய திட்டமிடல் வேண்டும். போதுமான மழை பெய்த பின்னரே விதைப்பு மேற்கொள்ள வேண்டும். வறட்சியை தாங்க கூடிய மற்றும் குறுகிய காலத்தில் மகசூல் தரக்கூடிய பயிர் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும். சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறைகளை பயன்படுத்தி நீரை சிக்கனமாக பயன்படுத்தி மழை நீர் சேகரிப்பு, பண்ணை குட்டைகள் அமைத்தல் வரப்புகள் அமைத்தல் மற்றும் மூடாக்கு போன்ற முறைகளால் மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்க வேண்டும். மண் பரிசோதனை அடிப்படையில் சமச்சீர் உரம் இடல் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வயல்களில் பூச்சி மற்றும் நோய் தாக்கங்களை தொடர்ந்து கண்காணித்து வேளாண் துறையினரின் பரிந்துரைப்படி பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தோட்டக்கலை பயிர்களுக்கு போதுமான ஈரப்பதம் மற்றும் நிழல் பாதுகாப்பும் ஏற்படுத்த வேண்டும். கால்நடைகளுக்கு போதுமான குடிநீர் வசதி, தீவனம் மற்றும் நிழல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சேலம் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டங்களில் பதிவு செய்து அரசின் வேளாண் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் சந்தேகங்கள் இருப்பின் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையம், தோட்டக்கலைத்துறை அல்லது வேளாண் பொறியியல் துறை அலுவலர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும்.

சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண் துறையினர் காலநிலை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விவசாயிகள் அதிகாரப்பூர்வ வானிலை முன்னறிவிப்புகளை மட்டுமே பின்பற்றி அறிவியல் அடிப்படையிலான சாகுபடி முறைகளை மேற்கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கோவை தெற்கு தொகுதி தவெக வேட்பாளருக்கு ரோபோ வாக்கு சேகரிப்பு
மறைந்த முன்னாள் தி.மு.க சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது ஓவியசிற்பக் கலைக்காட்சியினை காட்சிப்படுத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
காதல் திருமணம்: சினிமா பாணியில் பெண்ணை கடத்திய உறவினர்கள்: அதிரடியாக மீட்ட காவல்துறை
புதுக்கடை அருகே பூட்டி இருந்த வீட்டை உடைத்து பணம் பொருட்கள் திருட்டு: போலீசார் வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

மர்மமான முறையில் ஆட்டோ டிரைவர் இறப்பு: பொன்மலை போலீசார் விசாரணை

July 3, 2026
10 Views
​நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
புதிய தபால் நிலைய பாஸ்போட் சேவா மையத்தினை திறந்து வைத்தார்
கிராம நிருவாக அலுவலர்கள் பாராட்டு விழா
மாநில தலைவர் தலைமையில் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account