சென்னை: அக்.20.
தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். முப்பெரும் விழா மேடையில் முதலமைச்சர் குறித்து அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி உதயகுமார் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், சுதா தீனதயாளன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விசாரணைக்காக அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் காவல்துறையின் விசாரணைக்குப் பின்னர் தெரியவரும்.



