சென்னை, ஆகஸ்ட் 15 –
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சென்னை மண்டல தலைமை அலுவலக வளாகத்தில் 79-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. எஸ்.பி.ஐ மண்டல தலைமை பொது மேலாளர் விவேகானந்த் சோபே தேசியக் கொடியை ஏற்றி வைத்து நமது நாட்டின் ஒற்றுமையையும், சுதந்திரத்தினையும் குறிக்கும் வகையில் மூவர்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. விழாவில் எஸ்.பி.ஐ-யின் மூத்த அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
தலைமை பொதுமேலாளர் சுதந்திர தின உரையில் நாட்டின் வளர்ச்சியிலும் முன்னேற்றத்திலும் எஸ்.பி.ஐ – ன் முக்கிய பங்கு மற்றும் அதன் அர்ப்பணிப்பையும் எடுத்துரைத்தார். மேலும், அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பணியாளர்களான தேசத்திற்கு சேவை செய்து பெருமை சேர்த்த ஆயுதப்படைகளைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர்களுக்கு தன்னலமற்ற பணிக்காக பாராட்டு விழா நடத்தப்பட்டது.



