தென்தாமரைகுளம், செப். 22 –
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் தமிழக அரசு கோட்டாறு ஆயுர் வேத மருத்துவ கல்லூரியும் இணைந்து அன்புவனத்தில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் நடத்தியது முகாமிற்கு அன்புவனம் நிறுவனர் குரு மகா சன்னிதானம் பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். நிர்வாகி பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி முன்னிலை வகித்தார்.
கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மருத்துவர் சாய் விஜயபிரியா தலைமையில் மருத்துவர் சவீதா மேற்பார்வையில் பயிற்சி மருத்துவர்கள் விக்னேஷ்வர், கார்த்திகேயன், அருந்ததி, சுவேதா, கிருஷ்ண பிரியா, ஜோஸ்பின் பிரியா ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர்கள் பொதுமக்களுக்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகள் மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கினர். நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நாகராஜன், ராஜேந்திரன், அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பலன் பெற்றனர்.



