ஈரோடு, ஜூலை 29 –
ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்.கந்தசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலல நினைவு நாளையொட்டி வருகிற 3ந் தேதி அன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
கல்லூரி பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது எனவும், தேர்வுகள் முன்கூட்டி அறிவித்தபடி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற 28 ந் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. உள்ளுர் விடுமுறை நாளான 3ந் தேதி அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு ஈரோடு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



