நாகர்கோவில், ஜூலை 4 –
கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டம், தேசிய சுகாதார திட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் மூலம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் கீழ்கண்ட ஒப்பந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆலோசகர் -1, மருந்தாளுனர் – 1, தொழில் முறை சிகிச்சையாளர் – 1, நகர்ப்புற சுகாதார செவிலியர் – 19, காவலர்- 3, ஆகிய பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான தகுதிகள், இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை குறித்த விவரத்தினை இம்மாவட்டத்தின் www.kanniyakumari.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 15 – 07 – 2025 மாலை 5 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலகம், கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில் -1 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.