சிவகங்கை, அக். 2 –
சிவகங்கை மாவட்டத்தில் வீரத்தாய் குயிலி அவர்களின் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சூரக்குளத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள வீரத்தாய் குயிலி அவர்களின் திருவுருவச்சிலை மற்றும் நினைவுத்தூணிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
உடன் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ. தமிழரசி ரவிக்குமார், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வி தே. ஜெஃபி கிரேசியா, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கை மாறன், மானாமதுரை நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தோர், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



