சிவகங்கை, ஆகஸ்ட் 1 –
சிவகங்கை மாவட்ட அறங்காவலர் குழுவினர் மீண்டும் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டுறவுத்துறை அமைச்சர், சிவகங்கை மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்களின் ஆணையின்படி ஏற்கனவே மாவட்ட அறங்காவலர்களாக செயல்பட்டு வந்தவர்களின் இரண்டாண்டு பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததையொட்டி மீண்டும் அதே நிர்வாகிகளே தொடர்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
அதனடிப்படையில் இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் மூலலிங்கம் ஆகியோரது முன்னிலையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவராக புவணேஷ்வரி இளங்கோவன், மாவட்ட அறங்காவலர்களாக திமுக மாநில தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் ஏ.ஆர். ஜெயமூர்த்தி, வெள்ளையன், கௌரி கார்த்திகேயன், செல்வராஜ் ஆகியோர் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் அனைத்து நிர்வாகிகளும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.