திருப்பூர், செப்டம்பர் 29 –
கரூரில் அரசியல் கட்சி கூட்டத்தில் அப்பாவி பொது மக்கள், பெண்கள், குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்ததற்கு முதலில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி என்பவர். சமூக ஆர்வலர் பழனிச்சாமி என்பவர் கடந்த 10-09-2025 அன்று திட்டமிட்டு காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். அவரது குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டியும் திட்டமிட்டு படுகொலை செய்த விநாயகா பழனிசாமிக்கு சட்டப்படியான தண்டனை பெறுவதை உறுதி செய்யவும் திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் உள்ள ஜெர்மன் மீட்டிங் ஹாலில் மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் இ. ஆசிர்வாதம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தீர்மானம் 1 : சமூக ஆர்வலர் பழனிச்சாமியை கார் ஏற்றி கொலை செய்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமியை பேரூராட்சி தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும்.
தீர்மானம் 2: சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி திமுக கட்சி பதவி உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அடியோடு நீக்கம் செய்ய வேண்டும்.
தீர்மானம் 3: சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த விநாயகம் பழனிச்சாமிக்கு செய்தி தொடர்பு துறை அமைச்சர் சாமிநாதன் தொடர்பில் உள்ளதாக தகவல். சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி அரசியல், பொருளாதார பின்புலம் கொண்டவர் என்பதால் இந்த வழக்கை திருப்பூர் காவல்துறை விசாரித்தால் உண்மை வெளியே வராதது என்பதால் சிறப்பு புலனாய்வு பிரிவு சிபிசிஐடி பிரிவு தான் விசாரிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்ற 11-10-2025 ம் தேதி அன்று சாமளாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக என ஒரு மனதாக தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 4: திருப்பூர் மாவட்டத்தில் சமூக ஆர்வலர்களின் உயிருக்கு பாதுகாப்பு என்பது இல்லை அதற்கு எடுத்துக்காட்டு வழக்கறிஞர். தாராபுரம் முருகானந்தம் , சாமளாபுரம் பழனிச்சாமி சமூக வே ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இது மிக மோசமான, பாதுகாப்பாற்ற சூழல் தான். சமூக செயற்பாட்டாளர்கள், போராளிகளுக்கு உள்ளதை காட்டுகிறது எனவே சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சிறப்பு சட்டத்தை அமுல்படுத்த போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாண வேண்டுமென்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலு சிவக்குமார்,
தமிழக நெய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம் , திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலராகிய ஈ.பி.அ. சரவணன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க அமைப்பு செயலாளர் பிரபாகரன், நேர்மை மக்கள் இயக்கம் ரகுபதி, நாம் தமிழர் கட்சி மாநில பொறுப்பாளர் ரத்திணா மனோகர், வணிகர் சங்க பழனிவேல் ராஜன், சமூக ஆர்வலர்கள் KAK. கிருஷ்ண சாமி, மன்சூர், சண்முகம், குமாரசாமி, அழகுமலை, ஜெயக்கொடி, தேனி தங்கம்மாள், மீனா, கோபி, மாரப்பன், பிரவின் குமார் உள்ளிட்ட விவசாயிகள், ரவணிக சங்க பிரதிதிகள், அரசியல் கட்சியினர் கலந்து கொண்டர்.



