By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை ஈஷா பொறியியல் கல்லூரியில் ஓணம் திருவிழா கோலாகலம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை ஈஷா பொறியியல் கல்லூரியில் ஓணம் திருவிழா கோலாகலம்!
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை ஈஷா பொறியியல் கல்லூரியில் ஓணம் திருவிழா கோலாகலம்!

Last updated: August 28, 2026 3:13 pm
August 28, 2026
10 Views
Share
SHARE

கோவை, ஆக. 28.
முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விதமாக, கோவை ஈஷா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஓணம் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கேரள மாநிலத்தின் பாரம்பரிய பண்டிகையான ஓணம், கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களிலும் கடந்த சில நாட்களாக உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Contents
மகாபலி வேடத்தில் மாணவர்ஓணம் சத்யா விருந்து

கேரள எல்லையை ஒட்டி அமைந்துள்ள கோவை மாவட்டத்தில், கேரள கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஈஷா கல்லூரியிலும் ஓணம் விழா நடைபெற்றது. பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் தற்போது கல்லூரிக்கு வந்துள்ள நிலையில், அவர்களை வரவேற்கும் வகையிலும், மாணவர்களிடையே கலாசார ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையிலும் விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

ஈஷா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி செயலர் டி.ஈ. அஜித், தாளாளர் டி.ஈ. ஆதர்ஷ் ஆகியோர் தலைமை வகித்து விழாவைத் தொடங்கி வைத்தனர். இதையடுத்து கல்லூரி வளாகம் முழுவதும் ஓணம் பண்டிகையின் உற்சாகம் களைகட்டியது.

மகாபலி வேடத்தில் மாணவர்

விழாவில் மாணவ, மாணவிகள் கேரள பாரம்பரிய உடையணிந்து கலந்து கொண்டனர். மகாபலி மன்னரைப் போல் வேடமணிந்த மாணவர், செண்டை மேளம் முழங்க அழைத்து வரப்பட்டார். இதனை மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

கல்லூரி வளாகத்தில் மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் இணைந்து அமைத்திருந்த வண்ணமயமான பூக்கோலம் அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து மாணவிகள் பங்கேற்ற திருவாதிரைக்களி நடன நிகழ்ச்சி நடைபெற்றது. கேரளத்தின் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலித்த இந்த நடனம், விழாவில் பங்கேற்ற அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மகாபலி மன்னர் வேடமணிந்த மாணவருடன் சக மாணவர்கள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் கேரள பாரம்பரிய பாயாசம் வழங்கப்பட்டது.

ஓணம் சத்யா விருந்து

இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாரம்பரிய ஓணம் சத்யா விருந்து பரிமாறப்பட்டது. அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி, ஓணம் பண்டிகையின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் மாணவ, மாணவிகளின் சார்பில் கண்கவர் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நவீன நடனங்களும் இடம்பெற்றதால் விழா மேலும் உற்சாகமாக அமைந்தது.

மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்கள் காலை முதல் மாலை வரை ஒன்றிணைந்து ஓணம் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் ஈஷா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகமே வண்ணமயமான விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது.

விளம்பரம்

You Might Also Like

காளிகேசம் காளிஅம்மன் கோவில் பௌர்ணமி பூஜை
ராமநாதபுரம் அரண்மனையில் பாஜக பொதுக்கூட்டம்
நாகர்கோவில் அருகே நள்ளிரவில் தும்பு ஆலை – ஆக்கர் கடையில் தீ விபத்து: விடிய விடிய போராடி தீயணைப்பு
அருமனை போலீஸ் நிலையத்துக்கு விபத்து தடுப்பு வேலிகள் வழங்கல்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா: மாவட்ட காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

தி.மு.க. பொறியாளர் அணி புதிய நிர்வாகிகளை நியமனம்

December 21, 2024
169 Views
இரணியல் அருகே ஓடும் பஸ்ஸிலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா
ஜூன் 25ஆம் நாளை பாஜகவினர் கருப்பு தினமாக கொண்டாடினர்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா: ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account