கோவை, அக் :10
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தின் கீழ் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை ஆர்.டி. கனிமொழி எம்.எல்.ஏ. வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்வில், குழந்தைகளுக்குத் தங்க மோதிரங்களை வழங்கிய அவர், குழந்தைகள் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வளர வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
குழந்தைகளின் பிறப்பைக் கொண்டாடுவதோடு, குடும்பங்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தைச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கும் ஆர்.டி. கனிமொழி நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி மற்றும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



