கிருஷ்ணகிரி, மே 21 –
ஓவியக்கலை என்னும் நான்காம் இயல், சிற்பக்கலை என்னும் ஐந்தாம் இயல் ஆகியவற்றினை வளர்த்திடும் நோக்கிலும், அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வளரும் இளம் கலைஞர்களிடையே உள்ள கலைப்படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து வளர்க்கும் நோக்கிலும், ஓவிய – சிற்பக் கலைக்காட்சியினை 5000 பண்பாட்டுத்துறையின் வாயிலாக ஒவ்வொரு மண்டலத்திலும் நடத்திட ஆணையிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மையத்தின் சார்பாக ஓவிய சிற்பக்கலை காட்சி நடத்திடும் பொருட்டு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓவியம் மற்றும் சிற்பக்கலைகளில் ஈடுபட்டு வரும் கலைஞர்களிடமிருந்து சிறந்த கலை படைப்புகளை பெற்று காட்சிப்படுத்தி, அவற்றில் சிறந்து விளங்கும் படைப்புகளை வல்லுநர் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, சிறந்த கலைப்படைப்புகளை வழங்கிய 7 கலைஞர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2000 என வழங்கப்பட உள்ளது.
எனவே ஓவிய-சிற்பக் கலைஞர்கள் தங்களுடைய படைப்பை காட்சிப்படுத்திட விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது சுயவிவரக்குறிப்புடன் ஓவியம் மற்றும் சிற்ப படைப்புகளை மண்டல உதவி இயக்குநர் கலை பண்பாட்டு மையம், திருப்பதிகவுண்டனூர் சாலை, ஆவின் பால் பண்ணை எதிரில் அய்யம்பெருமாம்பட்டி அஞ்சல், சேலம்-636302 என்ற முகவரியில் அமைந்திருக்கும் அலுவலகத்தில் 15.06.2026 தேதிக்குள் நேரில் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பொருண்மை குறித்து 0427 – 2386197 0 9944457244. என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.


