இரணியல், பிப். 9 –
இரணியல் அருகே உள்ள தலகுளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (29) வெளிநாடு வேலைக்கு செல்ல உள்ள நிலையில் நேற்று மாலை தலக்குளம் ஆலயன் குளக்கரையில் அவரது அண்ணன் சதீஸ், நண்பர்கள் ராஜேஷ், பிரசாத், ஜோயல் ஆகியோர் மது அருந்த வந்துள்ளார்கள் . அப்போது மது போதையில் இருந்த ராஜேஸ் குளத்தில் குதித்துள்ளார்.
அதன்பின் கரை வராத காரணத்தினால் அவரது அண்ணன் குளத்தில் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளார். தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர் இது குறித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முத்து கிருஷ்ணன் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


