By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் இன்று தேரோட்டம்

Last updated: January 2, 2026 7:30 pm
January 2, 2026
34 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜன. 2 –

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் மார்கழி பெருந்திருவிழாவிற்காக கடந்த 25ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. மூன்றாம் திருவிழா அன்று இரவு மக்கள்மார் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஐந்தாம் திருவிழா அன்று கருட தரிசன நிகழ்ச்சியும் ஏழாம் திருவிழா அன்று கைலாச பருவத வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

எட்டாம் திருவிழா நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிதம்பரேஸ்வரர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜ பெருமானை அமரச் செய்து பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்ப தாணுமாலய சுவாமி கோவில் தெற்கு பாகத்தில் அமைந்துள்ள பேரம்பலம் நடராஜமூர்த்தி சன்னதி முன்பு ஆனந்த திரு நடன காட்சி நடைபெற்றது.

காலை 10 மணிக்கு நடராஜ பெருமானுக்கும் சிவகாமி அம்மனுக்கும் அலங்கார மண்டபத்தில் அஷ்ட்டாபிஷேகமும் மண்டகப்படி நிகழ்ச்சியும் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு நடராஜப் பெருமானுக்கும் சிவகாமிய அம்பாளுக்கும் அலங்கார மண்டபத்தில் வைத்து அஷ்ட அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முக்கிய விழாவான தேரோட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

அதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கங்காளநாதர் பிட்ச்சாடனராக திரு விதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9:15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேரில் விநாயகரும் சுவாமி தேரில் சுவாமியும் அம்பாள் தேரில் அம்பாளையும் அமரச் செய்து தேரை பக்தர்கள் தொட்டு ரத வீதியை ஒரு முறை வலம் வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு சுவாமி தந்த பல்லக்கில் எழுந்தருளள் நிகழ்ச்சியும் இரவு 11 மணிக்கு ரிஷப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் இரவு 12 மணிக்கு தனது தாய் தந்தையர்களின் திருவிழாவில் பங்கெடுத்துக்கொள்ள வருகை தந்த கோட்டாறு வலம்புரி விநாயகர் மருங்கூர் சுப்பிரமணியசுவாமி வேளிமலை குமாரசுவாமி ஆகிய சுவாமிகள் தங்களது தாய் தந்தையர்களை மூன்று முறை வலம் வந்து பிரிந்து செல்லும் சப்தா வர்ண காட்சி நடைபெறுகிறது.

பத்தாம் திருவிழாவான நாளை காலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் மாலை 5 மணிக்கு நடராஜர் திருவிதிஉலா வரும் நிகழ்ச்சியும் இரவு 9:30 மணிக்கு திரு ஆறட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தேரோட்ட நிகழ்ச்சி முன்னிட்டு காவல்துறை, மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சுசீந்திரம் பேரூராட்சி சார்பில் குடிநீர் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டன. போக்குவரத்திற்கு போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வரும் வாகனங்கள் ஆசிரமம் நான்கு வழி பாதை வழியாக திருப்பி விடப்படுகிறது.

அதுபோல கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் கற்காடு நான்கு வழி சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில்களின் இணை ஆணையர் ஜான்சி ராணி, கோவில் கண்காணிப்பாளர் ஆனந்தன், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன், தாணுமாலய சுவாமி கோயில் பக்தர்கள், பொதுமக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவருக்கு அடி உதை
குளச்சல் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை; கடைக்காரர் மீது போக்சோவில் வழக்கு
இளையராஜாவுடன் பாஜக பிரமுகர் சி.எஸ்.சுபாஷ்
நாகர்கோவில் “வந்தே பாரத் ” ரயில் சேவை
குறளகம் ஆண்டு விழா: அகில இந்திய தமிழர் கழகம் நிறுவனர் முத்துகுமார் மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம்

October 4, 2024
45 Views
ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம்
மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல்
திட்ட இயக்குனர் செய்தியாளர்களுடன் நேரில் சென்று ஆய்வு
ஆக்கிரமிப்புகளைஅகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account