நாகர்கோவில், மே 1 –
வெள்ளிச்சந்தை அருகே உள்ள உன்னங்குளம் பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் மனைவி கமலம் (70). இவர் இன்று காலை கணவரின் ரத்த பரிசோதனை முடிவு வாங்கி செல்வதற்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு புற நோயாளிகள் பிரிவில் கமலம் நின்று கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் வருவார் வந்து கமலத்திடம் பேச்சு கொடுத்துள்ளார்.
கமலம் கணவருக்கு ரத்த பரிசோதனை செய்த அறிக்கை வாங்க வந்துள்ளதாக கூறியுள்ளார். அந்த வாலிபர் தான் இங்கு அங்கு லேப் டெக்னீசியன் வேலை செய்து வருவதாகவும், மருத்துவமனைக்குள் செல்லும்போது நகை அணிந்து செல்லக்கூடாது எனவும், எனவே அதனை கழற்றி வைத்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
இதை உண்மை என நம்பிய கமலம் தனது கழுத்தில் கடந்த இரண்டே முக்கால் பவுன் செயினை கழற்றி பின்னர் சேலையில் முடித்து வைக்க முயன்ற போது, நகையை வாங்கிய வாலிபர் அங்கிருந்து அதை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கமலம் ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனை வெளிநோயாளிகள் பிரிவில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அந்த கேமராக்கள் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள்.


