இறச்ச குளம் சந்திப்பில் பயணிகள் நிழற்குடை ேவண்டும் – பொதுமக்கள் கோரிக்கை – பூதப்பாண்டி – ஏப்ரல் – 19-நாகர்கோவிலில் இருந்து கீரிப்பாறை செல்லும் சாலையில் இறச்சகுளம் சந்திப்பு முக்கிய பகுதியாக உள்ளது… இந்த சந்திப்பில் இருந்து பூதப்பாண்டியில் உள்ளபள்ளி, மருத்துவமனை , நீதிமன்றம் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளன இவை போகசுற்று வட்டார பகுதியில் உள்ள ஊர்களுக்கும் பொதுமக்கள் இறச்ச குளம் பகுதியில் இருந்துசென்று வருகின்றனர்,அதே போல இச்சந்திப்பில் இருந்து தான் ஆரல்வாய்மொழி, தாழக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கும் பொதுமக்கள்சென்று வருகின்றனர் ஆனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் நிழற்குடை இல்லாததால் தற்சமயம் அடிக்கும் வெயிலின் தாக்கத்தால் ஒவ்வொரு கடையாக சென்று ஒதுங்கி நிற்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள் மேலும் இனி வரும் மழை காலங்களிலும் இது போல் மழையினால் பொதுமக்கள் சிறமப்பட வேண்டிய சூழ்நிலையே உள்ளது எனவே பொது மக்கள்நலனை கருத்தில் கொண்டு இரு பக்கங்களிலும் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறார்கள்



