கிருஷ்ணகிரி, அக்.7:
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் மணல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், போக்குவரத்து சாலை பாதுகாப்பு ஆணையரகம் சார்பில் தயாரிக்கப்பட்ட “சாலை மொழிகள்” என்ற விழிப்புணர்வு புத்தகம் வெளியிடப்பட்டது.
மோட்டார் வாகனங்கள் (வாகனம் ஓட்டுதல்) விதிமுறைகள், 2017 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்தப் புத்தகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் வெளியிட, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ச.அனிதா பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மஞ்சுளா, ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஈஸ்வரமூர்த்தி, துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



