கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 26 –
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம் முகளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் டீல் நிறுவனம் சார்பாக சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 1 கோடியே 2 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 6 புதிய வகுப்பறை கட்டிடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் திறந்து வைத்தார். உடன் டீல் நிறுவன நிர்வாக இயக்குநர் என்.பி. ஸ்ரீதர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ், டீல் நிறுவன மூத்த பொதுமேலாளர்கள் சண்முகம், ரவி ஷிவப்பா உள்ளிட்ட பலர் உள்ளனர்.



