By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவிரி நீர் பிரச்சினையில் தவெக அரசு இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்? வி தி லீடர்ஸ் தன்னார்வலர் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > காவிரி நீர் பிரச்சினையில் தவெக அரசு இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்? வி தி லீடர்ஸ் தன்னார்வலர் கண்டனம்
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

காவிரி நீர் பிரச்சினையில் தவெக அரசு இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்? வி தி லீடர்ஸ் தன்னார்வலர் கண்டனம்

Last updated: July 21, 2026 2:16 pm
July 21, 2026
32 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 21 –

வீ தி லீடர்ஸ் அமைப்பின் தன்னார்வலர் எஸ் ஆர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடுமையான வெப்பநிலை, குறைந்த தென்மேற்கு பருவமழை, வறண்டு வரும் அணைகள், எதிர்கால குடிநீர் நெருக்கடி, சம்பா சாகுபடி குறித்த விவசாயிகளின் அச்சம்—இவை அனைத்தும் இன்று தமிழகத்தின் நிதர்சனமாக மாறியுள்ளன.

இந்தச் சூழலில், தமிழகத்திற்கு சட்டப்படி வழங்கப்பட வேண்டிய 21.09 டி.எம்.சி. காவிரி நீர் இன்னும் நிலுவையில் இருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இது வெறும் புள்ளிவிவரம் அல்ல. லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரமும், கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் பாதுகாப்பும் இதில் அடங்கியுள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையம் மாதாந்திர ஒதுக்கீட்டின்படி தமிழகத்திற்கு நீரை வழங்குமாறு கர்நாடக அரசுக்கு தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. அதற்குப் பிறகும் நீர் திறக்கப்படவில்லை என்றால், அந்த ஆணையத்தின் உத்தரவின் மதிப்பு என்ன? உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்க மறுக்கும் போக்கை கூட்டாட்சி அமைப்பு எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

கர்நாடக முதலமைச்சர் எங்கள் அணைகள் நிரம்பிய பிறகே தமிழகத்திற்கு நீர் வழங்கப்படும் என்று கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய அரசியலமைப்பின் கீழ் வழங்கப்பட்ட சட்டப்பூர்வ உரிமையை, ஒரு மாநிலம் தன்னிச்சையாக நிறுத்தி வைக்க முடியுமா? உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் விட அரசியல் அறிவிப்புகளுக்கே அதிக மதிப்பா?

அதே நேரத்தில், தமிழக அரசிடமும் சில தவிர்க்க முடியாத கேள்விகள் எழுகின்றன. தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற இதுவரை எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கைகள் என்ன? மத்திய அரசிடம் வலுவான பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டதா? காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் முன் தமிழகத்தின் உரிமை முழு வலிமையுடன் வலியுறுத்தப்பட்டதா? விவசாயிகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க அரசு தயாரித்துள்ள அவசர செயல் திட்டம் என்ன? தமிழகத்தின் உரிமை நீர் என்பது அரசியல் கோசமல்ல; அது அரசியலமைப்பால் பாதுகாக்கப்பட்ட உரிமை. அதை உறுதிப்படுத்துவது எந்த அரசாக இருந்தாலும் அதன் அடிப்படை அரசியல் மற்றும் சட்டப்பூர்வ பொறுப்பாகும்.

வரும் 22 ம் தேதி நடைபெறவுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் முக்கியமான வாய்ப்பாகும். அந்தக் கூட்டத்தில் தமிழக அரசு வெறும் கோரிக்கை மனுவுடன் நிற்காமல், நிலுவையில் உள்ள முழு காவிரி நீரையும் பெற்றுத் தருவதற்கான உறுதியான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை வலியுறுத்த வேண்டும்.
தேவைப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் உடனடி சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

தமிழக விவசாயிகளின் நலனும், மக்களின் குடிநீர் பாதுகாப்பும் அரசியல் விவாதங்களின் பொருளாக அல்ல; அரசின் செயல்திறனை அளவிடும் மிக முக்கியமான அளவுகோலாகும். இந்த விவகாரத்தில் இனியும் காலதாமதம் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க வேண்டிய நேரம் இது. காரணங்களைச் சொல்லும் நேரம் அல்ல; செயல்படும் நேரம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மொடக்குறிச்சியில் 19ந் தேதி அமித்ஷா பிரசாரம்: ஈரோட்டில் நயினார் நாகேந்திரன் பேட்டி
திருப்பூரில் பின்னலாடை சரக்குகளை வாங்கிக் கொண்டு ரூ.4.93 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணத்தை மீட்டுத் தரக் கூறி மனு !
முளகுமூடு பேரூராட்சி தற்காலிக அலுவலகம்; அஸ்திபாரம் பெயர்ந்த நிலையில் காணப்படும் கட்டிடம் சீரமைக்கப்படுமா?
நாகர்கோவில் பிரஸ் கிளப் தீபாவளி விழா கலெக்டர் அழகுமீனா பங்கேற்பு!
முதலமைச்சரிடம் சிறப்பு இருசக்கர வாகனம் பெற்ற மாற்றுத் திறனாளிகள் பரிந்துரை செய்த ராஜா எம்எல்ஏவை சந்தித்து நன்றி தெரிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாவட்ட(பொறுப்புத்) தலைவர்அ. இளங்கோவன் பொன்னாடை போர்த்தி கவுரவித்த

June 4, 2024
115 Views
களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான பள்ளங்கள்
அதிமுக சார்பில் ரத்ததான முகாம்
முன்னால் படை வீரர் சிறப்பு குறை தீர்ப்பு கூட்டம்
தருமபுரி தொப்பூரில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியில் ஆட்சியர் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account