மயிலாடுதுறை மே. 12
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 71 வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மேகங்கள் நிலவி வருவதால் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்றும் மக்கள் நலத்திட்டங்கள் மட்டுமே நடைபெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார் அதன்படி மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இரத்ததான முகாம் இன்று மயிலாடுதுறை திரு இந்தளூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரேம்குமார் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற முகாமை மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் பவுன்ராஜ் துவக்கி வைத்து ரத்ததானம் வழங்கியவர்களுக்கு அதிமுக சார்பில் ரத்தத்தின் ரத்தமே என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட சான்றிதழ்களை வழங்கினார்.
தொடர்ந்து மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நடைபெற்ற சிறப்பு பொது மருத்துவ முகாமையும் துவக்கி வைத்தார். ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று ரத்ததானம் அளித்தனர். தானமாக பெறப்பட்ட சுமார் 30 யூனிட் ரத்தம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டு ஏழை எளிய பொதுமக்கள் மருத்துவ சிகிச்சைக்கு விலையின்றி அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
இதில் அதிமுக முன்னாள் எம் எல் ஏ சக்தி, ராதாகிருஷ்ணன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் கோமல் அன்பரசன், நாஞ்சில் கார்த்தி, மணக்குடி சங்கர், ஆனதாண்டபுரம் முருகவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சேத்தூர் மணி, உள்ளிட்ட நகர பேரூர் கழக மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



