சுசீந்திரம், ஜூலை 27 –
சுசீந்திரம் அருகே உள்ள தேரூரில் பிறந்து தனது கவிதையால் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அவர்களது 151-வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் அமைந்துள்ள கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் முழு உருவ வெங்கல சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்வேல் முருகன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஜெகத் பிரைட், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ஆறுமுகம், சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் அனுசுயா, செயல் அலுவலர் அம்புஜம், வருவாய் ஆய்வாளர் பிரேம கீதா, கிராம நிர்வாக அலுவலர் வளர்மதி, உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.



