களியக்காவிளை, ஜூலை 31 –
கேரள மாநிலம் பூவார் புதியதுறை பகுதியை சேர்ந்தவர்கள் சஜி (50), மணி (50). பெயிண்டின் தொழிலாளர்கள். இருவரும் குமரி மாவட்டம் ஆற்றூர் பகுதிக்கு பெயிண்டிங் வேலைக்காக இன்று வந்தனர். கேரளத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் அதிகாலையில் புறப்பட்டவர்கள் களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு என்ற பகுதிக்கு இன்று காலை 6 மணி அளவில் வந்து சேர்ந்தனர். அவர்கள் அப்பகுதியில் உள்ள கடையில் டீ குடித்து விட்டு வேலை செல்வதற்காக மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுத்து புறப்பட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த பால்வேன் ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியதில் இதில் பயணம் செய்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் கேரள தொழிலாளர்கள் வந்த மோட்டார் சைக்கிள் வந்த தொழிலாளர்களில் ஒருவர் டெம்போ சக்கரத்தில் சிக்கினார். இதில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டார். அந்த தொழிலாளி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வந்த மற்றொரு தொழிலாளி மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பால்வேன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த தொழிலாளியின் உடலை மீட்டு குமரி அரசு மருத்து கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த இருவரையும் விட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள மருத்துவமனை இல் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மற்றொரு கேரள தொழிலாளி குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.


