By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கலைஞர் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > கலைஞர் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
தூத்துக்குடி

கலைஞர் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா

Last updated: September 4, 2025 11:18 am
September 4, 2025
23 Views
Share
SHARE

திருச்செந்தூர், செப். 4 –

திருச்செந்தூர் அருகேயுள்ள தண்டுபத்தில் நடைபெற்ற கலைஞர் 102-வது பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற கனிமொழி கருணாநிதி எம்.பி,
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா யானை நினைவு பரிசாக வழங்கினார். முன்னாள் முதலமைச்சர் தலைவர் கலைஞர் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நலத்திட்டம் வழங்குதல் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல் போன்ற வகையில் எழுச்சியுடன் கடைபிடிக்க வேண்டுமென தி.மு.க தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததின் அடிப்படையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அதன் நிறைவாக திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 200 அணிகள் பங்கேற்ற மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா தண்டுபத்தில் உள்ள பசுங்கிளி அம்மாள் – ராமமூர்த்தி அரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியில் பங்கேற்று வெற்றிபெற்ற 10 அணிகளுக்கு கோப்பை மற்றும் முதல் பரிசாக ரூ.1,00,000 இரண்டாம் பரிசாக ரூ.80,000 மூன்றாம் பரிசாக ரூ.70,000 நான்காம் பரிசாக ரூ.50,000 ஐந்தாம் பரிசு ரூ.40,000 ஆறாம் பரிசு ரூ.30,000 ஏழாம் பரிசு ரூ.25,000 எட்டாம் பரிசு ரூ.20,000, ஒன்பதாம் பரிசு ரூ.15,000 பத்தாம் பரிசு ரூ.10,000 வழங்கப்படவுள்ளது. மேலும் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த ஆல்ரவுண்டர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. அதேபோல் போட்டியில் பங்கேற்ற அனைத்து கிரிக்கெட் அணிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கருணாநிதி எம்.பி பங்கேற்று பரிசு, கோப்பை மற்றும் கிரிக்கெட் விளையாட்டு அணிகளுக்கு உபகரணங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நகராட்சி, பேரூராட்சி மன்ற மக்கள் பிரதிநிதிகள் திருச்செந்தூர் தொகுதி கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழக முன்னணியினர், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கிரிக்கெட் விளையாட்டு விரும்பிகள் பெருமளவில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அ. இளையராஜா தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நினைவு பரிசாக யானை வழங்கினார். பின்னர் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு நிகழ்வுகளில் ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் அ. இளையராஜா நாள்தோறும் தவறாமல் அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் செயல்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகலாபுரம் எஸ்.கே.கே. பள்ளியில் ஆரம்ப சுகாதார துறை சார்பில் புகையிலை விழிப்புணர்வு
அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி
தூத்துக்குடியில் உயர்வுக்கு படி வழிகாட்டி நிகழ்ச்சி
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சுமங்கலி பூஜை
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மூதாட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கனரக வாகனம் மோதி படிக்கட்டு பக்க சுவர் சேதம்; ஓடுகள் பெயர்ந்து விழும் நிலையில் கோவில்….நடவடிக்கை எடுக்க கோரிக்கை

January 3, 2026
14 Views
பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த ஆய்வு
அடுத்த மாதம் ஐந்தாம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி
ஸ்ரீ கழுங்கு முனியாண்டி கோயில் ஏழாம் ஆண்டு அன்னதான விழா
மதுரை சித்திரைத் திருவிழா – ஆய்வுக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account