கன்னியாகுமரி, ஜன.23-
கன்னியாகுமரி அருகே உள்ள முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இந்த திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவான நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை ஆரம்பமும் 7 மணிக்கு மங்கள பூர்ணாஹுதி நிகழ்ச்சியும் 8.15 மணிக்கு ராஜமேளமும் நடக்கிறது. பின்னர் 9-30 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் திருக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. 10.45 மணிக்கு உற்சவருக்கு அபிஷேகமும் 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.
மாலை 6 மணிக்கு சமய உரையும், இரவு 7 மணிக்கு பஜனையும் 8 மணிக்கு சுவாமி அம்பாளுடன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளம் முழங்க வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.2-ம் திருவிழாவான நாளை முதல் 9-ஆம் திருவிழா வான 31-ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையும் 10 மணிக்கு திரவியாஹூதி மற்றும் நிகழ்ச்சிகளும் பூர்ணாஹுதியும் நடக்கிறது.
10.15 மணிக்கு யாகசாலை தீபாராதனையும் 10.30 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் அதைத் தொடர்ந்து அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு பிரசாதம் வழங்குதலும் நடக்கிறது.மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு பஜனையும் 8 மணிக்கு சுவாமி அம்பாளுடன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
10-ம் திருவிழாவான அடுத்தமாதம் (பிப்ரவரி) மாதம் 1-ஆம் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜையும் 10 மணிக்கு திரவியாஹூதி மற்றும் பூர்ணாஹூதி நிகழ்ச்சிகளும் 10.15 மணிக்கு யாகசாலை தீபாராதனையும் 10.30 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் நடக்கிறது.
பின்னர் 11.30 மணிக்கு மூலவரான வேல்முருகனுக்கு வெள்ளி அங்கி சாத்தி அலங்கார தீபாராதனை நடக்கிறது. நண்பகல் 12 மணிக்கு சமபந்தி விருந்தும் மாலை 5.30 மணிக்கு ராஜமேளமும் அதைத்தொடர்ந்து 6 மணிக்கு உற்சவமூர்த்தி யுடன் பக்தர்கள் கிரிவலம் உலா வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு ஸ்ரீ கார்த்திகை பொய்கை தெப்பக்குளத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி ஆராட்டு நிகழ்ச்சியும் அதைத்தொடர்ந்து 8 மணிக்கு சுவாமி முன்னிலையில் த்வஜா அவரோஹணமும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவில் நிர்வாகக் குழுவினர் செய்து வருகிறார்கள்.


