கன்னியாகுமரி, மார்ச் 30 –
கன்னியாகுமரியை அடுத்து உள்ள கோவளம் பகுதியில் வசிப்பவர் ஜெயராம். இவரது மகன் ஜோயல் (14). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் நேற்று முன்தினம் மாலை கோவளம் பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். குளத்தில் குளித்து கொண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது நீரில் மூழ்கியுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தால் வெளியே வர முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


