திருவள்ளூர், ஜூலை 29 –
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் பைனான்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாகத் தலைவருமான ஆனந்தன் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு (சி எஸ் ஆர்) நிதியின் மூலம் 69 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய பள்ளி வளர்ச்சி திட்டத்தை திறந்து வைத்தார்.
யுனைடெட் வே சென்னை (யுனைடெட் வே சென்னை) அமைப்பின் மூலம் செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ், தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் தலா இரண்டு வகுப்பறைகள் என மொத்தம் நான்கு நவீன வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டம், எல்.இ.டி. விளக்குகள், தரமான மின்சார வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங் பைனான்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கல்வி, சுகாதாரம், சாலை பாதுகாப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இதுவரை 10 கோடிக்கும் அதிகமான நிதியை வழங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் அமுதா கலந்து கொண்டு சிறப்பித்தார்.



