நாகர்கோவில், ஜூன் 5 –
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நாகர்கோவில் மாநகராட்சி தெற்கு மண்டலம் தெங்கம்புதூர் பேரூராட்சி உள்ள மண்டல அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகள் – 2026 குறித்து நாகர்கோவில் மாநகராட்சி பொறுப்பு மேயர் மேரி பிரின்ஸி லதா தலைமையில் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மண்டல தலைவர் டாக்டர் முத்துராமன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து உலக சுற்றுச்சூழல் தின உறுதிமொழி எடுக்கப்பட்டு, அப்பகுதி மக்களிடம் குப்பைகளை நான்கு வகைகளாகப் பிரித்து வழங்குவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டு, அதற்கான துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.



