தருமபுரி, மே 20 –
தருமபுரி நகரில் உள்ள செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 2025 – 2026 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து ஐந்தாவது வருடமாக மாநில மற்றும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த பள்ளியின் மாணவிகள் ஸ்ரீ நிதவர்ணா, கோபிகா ஸ்ரீ ஆகியோர் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடமும், மாவட்ட அளவில் முதல் இடமும், பள்ளி அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்கள்.
இதே போன்று மாணவிகள் லஷ்மிதா, சுமையா ஆகியோர் 497 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடமும், பள்ளியளவில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர். மேகவர்ஷினி, நிகில் பிரசாத் 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். 490 மதிப்பெண்களுக்கு மேல் 22 மாணவர்களும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 57 மாணவர்களும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 96 மாணவர்களும், 460 மதிப்பெண்களுக்கு மேல் 124 மாணவர்களும் பெற்றுள்ளனர்.
கணிதம் 10 மாணவர்களும், அறிவியல் 43 மாணவர்களும், சமூக அறிவியல் 21 மாணவர்களும் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சாதனை படைத்த மாணவ, மாணவிகளை செந்தில் பள்ளி நிறுவனங்களின் தலைவர் செந்தில் சி. கந்தசாமி சால்வை அணிவித்து பூக்கொத்து வழங்கி பாராட்டினார்.
செந்தில் குழுமத் துணைத் தலைவர் மணிமேகலை, செந்தில் கல்வி குழுமங்களின் செயலாளர் தனசேகர், நிர்வாக அலுவலர் ரபீக் அகமத், முதல்வர் வள்ளியம்மாள், மேலாளர் சாந்தி, முதல்வர் (நிர்வாகம்) ஓங்காளி ,மேல்நிலை பிரிவு முதல்வர் திருநாவுக்கரசன், இடைநிலை பிரிவு பொறுப்பாசிரியர் சசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.



