நாகர்கோவில், ஏப்ரல் 24 –
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவில் முதல் முறையாக வாக்களிக்கும் புதிய வாக்காளர். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் தலைமுறை வாக்காளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இந்த தேர்தலில் அதிகப்படியான முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமாக வாக்களித்தனர். அந்த வகையில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கங்காடியா பள்ளியில் நடைபெற்ற வாக்குப்பதிவில் முதல் முறை வாக்காளர் ஜெட்லின் சிங் தனது வாக்குப்பதிவை செய்தார்.
தனது வாக்கை பதிவு செய்துவிட்டு வெளியே வந்த முதல் முறை வாக்காளர் ஜென்ட்லின் சிங் தின தமிழ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜனநாயக கடமையான வாக்களிப்பது ஒரு வாக்காளராக எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது. காரணம் தமிழக முதல்வரை தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் தேர்வில் என் போன்ற இளம் தலைமுறை வாக்காளர்களின் வாக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
நான் இன்று அளித்தது வெறும் ஓட்டு இல்லை ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் நல்ல வாய்ப்பாக கருதுகிறேன். மேலும் இந்த முறை வாக்குச்சாவடிகளை நோக்கி இளம் தலைமுறையினர் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர். இவர்களின் வருகையால் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கும் என நம்புகிறேன். இன்றைய இளம் தலைமுறையினர், முதல் முறை வாக்காளர்கள் ஒவ்வொரு முறையும் தேர்தல் நடைபெறும் போதும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறேன்.
எங்களைப் போன்ற இளம் தலைமுறையினரின் வாக்கு ஒரு புதிய புரட்சியையும், மாற்றத்தின் தொடக்கத்தையும் ஏற்படுத்தும் என தெரிவித்த அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு எது தேவையோ அதை செய்து தரும் நல்ல அரசு அமைய என் போன்ற இளைய சமுதாயத்தினரின் வாக்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.



