By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இருவழிபாதை பணிகள் நிறைவு: மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இருவழிபாதை பணிகள் நிறைவு: மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இருவழிபாதை பணிகள் நிறைவு: மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க கோரிக்கை

Last updated: May 7, 2026 4:07 pm
May 7, 2026
10 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 7 –

மதுரை – நாகர்கோவில் வழியாக புனலூர் செல்லும் பயணிகள் ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

வேளாங்கண்ணிக்கு பல்வேறு வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும் நிலையில், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட பயணிகளுக்கு நேரடி ரயில் வசதி இல்லாததால் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. குறைந்தபட்சம் திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயிலையாவது நாகர்கோவில் – திருநெல்வேலி வழியாக இயக்கியிருக்கலாம் என்று பயணிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மதுரையிலிருந்து நாகர்கோவில் வழியாக புனலூர் செல்லும் இந்த ரயில், 410 கி.மீ. தூரம் மட்டுமே பயணிக்கிறது. எக்ஸ்பிரஸ் ரயிலாக மாறியதால் கட்டணம் உயர்ந்து பயணிகள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. எனவே, இந்த ரயிலின் வேகத்தை அதிகரித்து திருச்சி வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டித்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீட்டிக்கப்பட்டால் மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் பயனடைவர். இதனால் ரயில்வேக்கு கூடுதல் வருவாயும் கிடைக்கும். தற்போது இரணியல் முதல் தஞ்சாவூர் வரையிலான பகுதிகளில் இருவழிபாதை பணிகள் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. இதனால் கிராசிங் தேவை இல்லாமல் ரயிலை வேகமாக இயக்க முடியும்.

திருவனந்தபுரம், கொல்லம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த கிறிஸ்தவ சமூகத்தினர் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு அதிக அளவில் செல்கின்றனர். அதேபோல், முஸ்லிம் பக்தர்கள் நாகூர், முத்துப்பேட்டை, காரைக்கால் தர்காக்களுக்கும், இந்து பக்தர்கள் திருநள்ளாறு சனி பகவான் ஆலயம் உள்ளிட்ட நவகிரகத் தலங்களுக்கும் செல்ல நேரடி ரயில் வசதி இல்லாதது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில் குமரி, நெல்லை மாவட்டங்களிலிருந்து திருச்சி செல்லும் தற்போதைய ரயில்கள் பெரும்பாலும் நள்ளிரவு நேரத்தில் இயக்கப்படுவதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இருவழிபாதை பணிகள் நிறைவடைந்துள்ளதால், மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் ரயிலை வேளாங்கண்ணி அல்லது காரைக்கால் வரை நீட்டித்து, திருச்சிக்கு வசதியான நேரத்தில் ரயில் இயக்க வேண்டும் என்றும் பயணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கோட்டார் கம்பளம் பகுதியில் அரசு பஸ் மோதி வாலிபர் பலி
பாலப்பள்ளம் பேருராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை
அரூர் வட்டாரக் கால்நடை மருத்துவமனையில் பாலார் வேளாண் கல்லூரி: RAWE மாணவர்கள் பங்கேற்பு
கர்ப்பிணிக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்காத பெண் டாக்டருக்கு ரூ.3 லட்சம் அபராதம்; நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்; பேராசிரியர் உட்பட 3 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி

April 19, 2025
125 Views
பெண்கள் கபடி போட்டியில் தமிழகம் வெண்கலம்
தஞ்சாவூரில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் பாஜக கட்சியினர் திமுகவில் மதியழகன் எம் எல் ஏ முன்னிலையில் இணைந்தனர்
ஏரியூரில் அடையாளம் தெரியாத நபர் மர்ம மரணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account