By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இன்டர்சிட்டி ரயில் நீட்டிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் இரணியலில் நிற்காமல் செல்லும் அவலம்: பயணிகள் வேதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இன்டர்சிட்டி ரயில் நீட்டிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் இரணியலில் நிற்காமல் செல்லும் அவலம்: பயணிகள் வேதனை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இன்டர்சிட்டி ரயில் நீட்டிக்கப்பட்டு 9 ஆண்டுகள் ஆகியும் இரணியலில் நிற்காமல் செல்லும் அவலம்: பயணிகள் வேதனை

Last updated: July 14, 2026 7:45 pm
July 14, 2026
55 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 14 –

திருநெல்வேலியிலிருந்து திருச்சிக்கு இயக்கப்பட்டு வந்த இன்டர்சிட்டி தினசரி ரயில், குமரி மாவட்ட மக்களின் நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி முதல் நாகர்கோவில் டவுண் வழியாக திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டது. அப்போதைய மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இதற்கு முக்கிய பங்கு வகித்தார்.

இந்த ரயில் திருவனந்தபுரத்திற்கு நீட்டிக்கப்பட்ட போது நாகர்கோவில் டவுண் மற்றும் குழித்துறை ரயில் நிலையங்களில் மட்டுமே நிறுத்தம் அனுமதிக்கப்பட்டது. ஆனால், முக்கிய சந்திப்பான இரணியல் ரயில் நிலையத்திற்கு தற்காலிக நிறுத்தம் கூட வழங்கப்படவில்லை. இரணியலில் இருந்து நாகர்கோவில் 18 கி.மீ தொலைவிலும், குழித்துறை 15 கி.மீ தொலைவிலும் உள்ளன.

முன்பு இந்த ரயில் இயங்கும் 456 கி.மீ தூரத்தில், திருச்சி முதல் மதுரை வரையிலான 156 கி.மீ மட்டுமே இருவழிப்பாதையாக இருந்தது. மீதமுள்ள 300 கி.மீ ஒற்றை வழிப்பாதை என்பதால், ‘கிராசிங்’ காரணங்களுக்காகப் பல்வேறு நிலையங்களில் ரயில் நிறுத்தப்பட்டது. இதனால் புதிய நிறுத்தங்கள் வழங்கினால் ‘சூப்பர்பாஸ்ட்’ அந்தஸ்து பறிபோய்விடும் என ரயில்வே துறை மறுத்து வந்தது.

ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. இரணியல் முதல் திருவனந்தபுரம் வரையிலான 52 கி.மீ தூரத்தைத் தவிர, மீதமுள்ள 404 கி.மீ தூரமும் இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுவிட்டது. தற்போது இந்த ரயில் முதல் ‘கிராசிங்’-காக இரணியல் ரயில் நிலையத்திலேயே நின்று செல்கிறது. அவ்வாறு நின்று செல்லும் போது, அங்கு பயணிகளை ஏற்றி இறக்க அனுமதித்தால் ரயில்வே துறைக்குக் கூடுதல் வருவாய் மட்டுமே கிடைக்கும்.

கன்னியாகுமரி மாவட்டம் அதிக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதி என்பதால், நிலையங்களுக்கு இடைப்பட்ட தூரத்தைக் கணக்கில் கொள்ளக் கூடாது எனப் பயணிகள் சங்கத்தினர் கூறுகின்றனர். இரணியல் ரயில் நிலையம் திருவனந்தபுரம் கோட்டத்தில் வருவாய் அடிப்படையில் 27-வது இடத்தில் உள்ளது.

இரணியல் ரயில் நிலையத்தின் தற்போதைய ஆண்டு வருவாய் சுமார் 4.97 கோடி ரூபாய். ஆண்டு பயணிகள் எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 405 ஆகும். தினசரி வருவாய் ரூ1 லட்சத்து 36 ஆயிரத்து 375 ஆகும். தினசரி பயணிகள் எண்ணிக்கை:1,127 ;நின்று செல்லும் ரயில்கள் 24 ஆகும்.

“மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது” என்ற பழமொழிக்கு ஏற்ப, வெறும் மனுக்கள் கொடுப்பதோ அல்லது நாடாளுமன்றத்தில் பேசுவதோ மட்டும் குமரி மாவட்ட ரயில்வே வளர்ச்சிக்கு உதவாது. அண்டை மாநிலமான கேரளாவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ரயில்வே வாரிய அதிகாரிகளைச் நேரில் சந்தித்து, தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடிச் சாதிக்கிறார்கள். அதேபோன்றதொரு தீவிரமான அழுத்தத்தையும், அதிரடி நடவடிக்கைகளையும் குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளும் எடுத்தால் மட்டுமே இன்டர்சிட்டி ரயிலுக்கான இரணியல் நிறுத்தம் சாத்தியமாகும் என கல்குளம் தாலுகா பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

வீ த லீடர்ஸ் சார்பில் போதைப்பொருளுக்கு எதிரான உறுதி மொழி
நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் வெற்றி
திராவிடக் கொள்கையை பின்பற்றித்தான் தமிழகத்தில் எந்த கட்சியாலும் ஆட்சி நடத்த முடியும்: திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா எம்பி பேச்சு
இருமத்தூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 114 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சரவணன் வழங்கினார்
அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

பக்தர்களுக்கு சிற்றுண்டி உணவு மற்றும் நீர் மோர் வழங்கல்

May 14, 2025
109 Views
தருமபுரம் ஆதீனகர்த்தரிடம் தானமாக வழங்கிய தொழிலதிபர்
நாகர்கோவிலில் கல்லறை தோட்டத்தில் குருசடி உடைப்பு: போலீஸ் விசாரணை
தெற்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மானிய உதவியுடன் தொழில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account