தூத்துக்குடி, அக். 6 –
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் உலக இயற்கை சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காயா மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலிகை தோட்டம் அமைந்துள்ள இடத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் உலக இயற்கை சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காயா மொழி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூலிகை தோட்டம் அமைந்துள்ள இடத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் கதிர்வேல் அவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார். ஆயுர்வேதா மருத்துவ அலுவலர் ஜான் மோசஸ் உலக சுற்றுச்சூழல் தினத்தின் முக்கியத்துவத்தை பற்றி பொது மக்களுக்கு விளக்கினார். ஆயுஷ் மருந்தாக்கியல் கண்காணிப்பு அலுவலர் மரு.ரூபன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் அரசு சித்த மருத்துவர் பிந்துஜா, மருந்தாளர் கஸ்தூரி, மருத்துவமனை பணியாற்றினார். மாயாண்டி மற்றும் பொதுமக்கள் பங்குபெற்றனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.



