கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் எம் வெள்ளாளப்பட்டியில் கணிதா ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியர் திருநாவுக்கரசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுசரித்து பர்கூர் ஐ.இ.எல்.சி.மான்ஸ் மனவளர்ச்சி குன்றியோர்க்கானப் பள்ளியில் மாணவர்களுக்கு
பெ. வசந்தகுமார் தலைமையில் சிறப்பு அழைப்பாளர்களாக விடுதலை சிறுத்தைகளின் கட்சி மாவட்ட செயலாளர் குபேந்திரன் சமூக நலத்துறை அலுவலர்(மகளிர்) காந்திமதி விசிக கட்சியின் நிர்வாகிகள் பர்கூர் ஒன்றிய செயலாளர் தா மாதையன், ஒன்றிய துணை செயலாளர் சுரேஷ், நகரச் செயலாளர் உதயகுமார் என்கிற கோடாரிவளவன் மற்றும் பர்கூர் ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது ஐ.இ.எல்.சி விடுதிக்காப்பாளர் எஸ் வெற்றிச்செல்வன் அவர்கள் திருநாவுக்கரசு ஆசிரியர் அவர்களின் நினைவு நாள் அஞ்சலியை செலுத்தி மாணவர்களுக்கு உணவு வழங்கியமைக்காக குடும்பத்தினருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார் எனக் கூறி நன்றி தெரிவித்துக் கொண்டார்.