By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கணபதி பூஜை மற்றும் கொடியேற்றம்: ஆடி முதல் வெள்ளியில் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கணபதி பூஜை மற்றும் கொடியேற்றம்: ஆடி முதல் வெள்ளியில் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ஆன்மிகம்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

அவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் கணபதி பூஜை மற்றும் கொடியேற்றம்: ஆடி முதல் வெள்ளியில் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Last updated: July 17, 2026 5:51 pm
July 17, 2026
30 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 17 –

ஆடி மாதம் என்றாலே அம்மன் வழிபாட்டிற்குரிய மிகவும் தெய்வீகமான மாதமாகும். அதிலும் குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபடுவது சகல சௌபாக்கியங்களையும் தேடித்தரும்.​ இந்த ஆண்டு 2026ல் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 16 வரை ஆடி மாதம் நீடிக்கிறது.

இந்த ஆண்டின் சிறப்பு என்னவென்றால், ஆடி மாதத்தின் முதல் நாளே ஆடி வெள்ளிக்கிழமையாகத் தொடங்குகிறது. ​2026ம் ஆண்டின் ஆடி முதல் வெள்ளி நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரி சேலம் ரோட்டில் உள்ள அவதானப்பட்டி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதலே ஏராளமான பெண்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இங்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும், அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமானோர் வந்து வழிபட்டு செல்வது வழக்கம்.

பிரசித்தி பெற்ற அவதானப்பட்டி மாரியம்மன் கோவிலில் அறங்காவலர் குழு தலைவர் திருப்பதி கவுண்டர் தலைமையில் ஆடி 1 முதல் ஆடி 27ம் தேதி வரை, 262ம் ஆண்டு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருவிழா மிக பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதை ஒட்டி இன்று அதிகாலை 9 மணிக்கு கணபதி பூஜை மற்றும் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் விபூதி, குங்குமம் பிரசாதம் விழா குழுவினர் வழங்கினார்கள். ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த சக்கரை பொங்கல், வெண் பொங்கல், தயிர் சாதம், புளி சாதம் உள்ளிட்ட பிரசாதங்களை கொண்டு வந்து பக்தர்களுக்கு வழங்கினார்கள். ஏராளமான கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அலங்கரிக்கப்பட்டிருந்த அவதானப்பட்டி ஸ்ரீமாரியம்மனை தரிசனம் செய்தனர்.

வரும் ஆகஸ்ட் 3, 4, 5, ஆகிய தேதியில் நடைபெறவிருக்கும் திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொள்ளுமாறு ஸ்ரீ அருள்மிகு அவதானபட்டி மாரியம்மன் திருவிழா குழுவினர் கேட்டுக்கொண்டனர். பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் சேர்மன் சி.ஆர்.திருப்பதி கவுண்டர் தலைமையில் நடைபெறவிருக்கும் 262 ஆம் ஆண்டு அவதானப்பட்டி ஸ்ரீமாரியம்மன் திருவிழாவில் பரம்பரை அறங்காவலர் உறுப்பினர்களான சி.மாரியப்பகவுண்டர், பி.மாரியப்பன் கவுண்டர், திருப்பதிகவுண்டர், மகேந்திரகவுண்டர், சீனிவாசகவுண்டர், கிருஷ்ணமூர்த்திகவுண்டர், ஆகியோர் முன்னிலையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி இணை ஆணையர் கிருஷ்ணன், கிருஷ்ணகிரி துணை ஆணையர் ராஜா, தர்மபுரி கோட்டை மல்லிகா அர்ச்சுனன் திருக்கோயிலின் செயல் அலுவலர் சத்யா, காவேரிப்பட்டினம் ஆய்வாளர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் மாரியம்மன், பூங்காவனத்தம்மன், காளியம்மன், சக்தி மாரியம்மன் கரகம் எடுத்து பம்பை ஆட்டம், சிலம்பாட்டம், விளக்குமாவு எடுத்தல், சாமி வேடம் இடுதல், சிவன், பார்வதி, கிருஷ்ணன், ராதை, ருக்கு, மகாமுனிவர், வேதவியாசர், நாதர் வேடம் இடுதல், அம்மாவிற்கு முன் வேடம் இடுதல், கேரளா சண்டி மேளம் ஆடுதல், அம்மனுக்கு கிடா வெட்டுதல், ஆகிய நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவதாகவும் விழா குழுவினர் தெரிவித்தனர்.

மிக பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் இத்திருவிழாவிற்கு பக்தர்கள் அனைவரும் வந்திருந்து அம்மன் அருளை பெற்று செல்லுமாறும் நிகழ்ச்சிகளை கண்டு களிக்குமாறும் அவதானப்பட்டி, அனைத்து ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் சார்பில் கேட்டுக்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலையில் செல்போன் ஒப்படைத்த இளைஞர்
போதைப்பொருட்கள் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
சிப்காட் வளாகப் பகுதியில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
கிருஷ்ணகிரியில் இயற்கை இடர்பாடுகளை தடுக்க ஏதுவாக முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி தாமதம்: 500 கிராம மக்கள் அவதி: பொதுமக்கள் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தி.மு.க தலைவர் ஸ்டாலின் பெயரில் விருது

September 13, 2024
67 Views
சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த விவகாரம்; மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு சார்பில் சிபிசிஜடி விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்
புதிய கட்சி துவக்கத்தில் விபரீதம் – யானை சின்னம் காரணமாக வழக்கு
ஈரோடு மாநகர் மாவட்டத்தில்1008 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட ஏற்பாடு
காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கோபி ரத்ததானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account