By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தமிழ்நாடு கண்ணுக்கு தெரியும்; கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தமிழ்நாடு கண்ணுக்கு தெரியும்; கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தமிழ்நாடு கண்ணுக்கு தெரியும்; கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு

Last updated: November 22, 2025 6:59 pm
November 22, 2025
40 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 22 –

கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குமரி மாவட்ட மீனவர் கூட்டமைப்புகள் சார்பில் உலக மீனவர் நாளை முன்னிட்டு, குளச்சல் மீன்பிடித் துறைமுக மைதானத்தில் மீனவர் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தனராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

விழாவில் பேசிய கனிமொழி கூறியதாவது: கடலை ஆண்ட பரம்பரை என்று பெருமையோடு நம்மை சொல்லிக் கொள்ளக்கூடிய அந்த பரம்பரையைச் சார்ந்தவர்கள் தான் தமிழர்கள். நம்முடைய மூதாதையர்கள் காலம் தொட்டு, நம்முடைய மாமன்னர்கள் காலம் தொட்டு, கடல் வழியாக பல நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தவர்கள் நாம். அந்தப் பெருமையுடனே தான் மீனவர் தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.

மீனவர்கள் கோரிக்கை வைக்கும்முன்னரே அவர்கள் நலனுக்கான திட்டங்களை முதல்வர் திட்டமிட்டு செய்து வருகிறார். மீனவர்களுக்காக அரசு மாநாடு நடத்திய பெருமையும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. மீனவ சமூகத்தை சார்ந்த பிள்ளைகள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., படிக்கவேண்டும் என்பதற்காக திட்டங்களை தீட்டி, எல்லாரும் படிக்க கூடிய வாய்ப்புகளை பெற வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஆட்சி திமுக.

இப்போது மத்திய அரசு எஸ்.ஐ.ஆர்-யை கொண்டு வந்து, அதற்கு போதிய அவகாசம் இல்லை. 45 நாள் முதல் 60 நாட்களில் உங்களுக்கு வாக்குரிமை இருக்கிறதா இல்லையா என்பதை அதிகாரிகள் முடிவு செய்வார்கள். பீகாரில் நடைபெற்ற தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டது, சிந்திக்கக்கூடிய பெண்களின் வாக்குகள் பறிக்கப்பட்டது, தலித் மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டது.

பாஜகவிற்கு தேர்தல் நேரத்தில் மட்டும் தான் தமிழ்நாடு கண்ணுக்கு தெரியும், மற்ற நேரங்களில் மறந்துவிடுவார்கள். தேர்தல் நேரத்தில் கூட நம்முடைய கோரிக்கைகளை நிராகரிப்பார்கள். மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் இல்லை என்பார்கள். குளச்சலில் துறைமுகம் வேண்டும் என்று மீனவ மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள், அதற்கும் பணம் இல்லை. மழை–புழலுக்கான நிவாரணம் கேட்டல், அதற்கும் பணம் இல்லை என்கிறார்கள்.

பாஜக நமது திட்டங்களை நிராகரித்து, அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து, வரும் தேர்தலில் வாக்குகள் வேண்டும் என்று கேட்க்கிறார்கள். இப்படிப்பட்ட நாடகங்களுக்கு நடுவே மக்களின் சமூகநீதியையும் உரிமைகளையும் காக்கும் பொறுப்பு நமக்கே உள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி எப்போதும் மக்களோடு நின்று பயணிக்கும் என்ற உறுதியை எந்த மீனவர் தினத்தில் உறுதியளிக்கிறேன் என்று பேசினார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், பால்வளத்துறை அமைச்சருமான மனோ தங்கராஜ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ், தமிழ்நாடு அரசு மாநில உணவு ஆணையத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட், திமுக மாநில மீனவர் அணி அமைப்பாளர் ஏ.ஜே.ஸ்டாலின், சத்யபாமா பல்கலைகழக நிர்வாக இயக்குநர் Dr.மரியஜீனா ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அக் 25-ல் மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
யானை வாங்க நிதி உள்ளது! அங்குசம் வாங்க நிதி இல்லையோ?ரூ.40 கோடி செலவில் அமைக்கப்பட்ட ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் உட்கார இருக்கை இல்லாததால் கடும் அவதி
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜா எம்எல்ஏ சந்திப்பு
நாகர்கோவிலில் கஞ்சா விற்க முயன்ற
குமரி முழுவதும் சாரல் மழை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி புனித அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது; தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது

December 6, 2025
44 Views
திற்பரப்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; தமிழக முதல்வர் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டி
விளாத்திகுளம் புதூரில் சுதந்திர தின எழுச்சி பேரணி
அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிர்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account