நாகர்கோவில் , மே – 04,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு ரயிலடி திடல் அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன் கழுமாடன் சுடலைமாடன் சுவாமி திருக்கோவில் கொடை விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. விழாவில் காலை 9 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் மதியம் உச்சி கால பூஜை மதியம் ஒரு மணிக்கு சிறப்பு தீபாராதனையும் அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மாநில சட்ட ஆலோசகர் தமிழ் பா மே நடன சங்கம் கமல் கணேசன் ஆகியோர் மாபெரும் அன்னதானத்தை துவக்கி வைத்தனர் மாலை ஆறு முப்பது மணிக்கு நையாண்டி மேளம் 7:30 மணிக்கு தப்பு மேலமும் 11 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் இரவு 12 மணிக்கு அன்ன படைப்பு படைத்து சிறப்பு பிரசாதாம் படைத்து கொடை விழா நிகழ்ச்சி நிறைவு பெற்றது.



