திருச்சி, ஜூலை 23 –
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டியை, அதிகாலை 5 மணியளவில் எலி ஒன்று கடித்துள்ளது. இதனால் மூதாட்டியின் காலின் பெருவிரலில் காயம் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே அங்குள்ள மருத்துவரிடம் புகார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உரிய தடுப்பூசிகளையும் மருந்துகளையும் செலுத்தி தீவிரமாக பரிசோதித்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம்



